ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர் இறுதி போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் 10-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். இறுதிப் போட்டியில் சிட்சிபாஸை 6-3, 7-6, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

மெல்போர்னில் நடைபெற்ற இந்த இறுதி போட்டி 2மணி நேரம் 56 நிமிடம் நீடித்த நிலையில் இறுதியில் முடிவில் ஜோகோவிச் 6-3, 7-6, 7-6 என்ற  செட் கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்படி ஜோகோவிச் 10வது முறையாக ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இதன்மூலம்  இந்த தொடரில் அதிக முறை கோப்பை வென்ற வீரர்கள் வரிசையில் ஜோகோவிச் முதலிடத்தில் நீடிக்கிறார். அடுத்த 2 இடங்களில் தலா 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியாவின் ராய் எமர்சன், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் உள்ளனர்.

அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் 22 பட்டங்களுடன் நடாலுடன் ஜோகோவிச் இணைந்தார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றதன் மூலம் ஜோகோவிச் மீண்டும் உலகின் முதல்நிலை வீரர் ஆனார்.

Related Stories: