ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்மணி போட்டி

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் கண்மணி என்கிற மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். கடந்த 2021-ல் நடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் வேட்பாளர் 11,629 வாக்குகளை பெற்றிருந்தார். அதிமுக இதுவரை வேட்பாளரை அறிவிக்காத நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை அறிவித்துள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களமிறங்கியுள்ளார்.

Related Stories: