மோடிக்கு எதிரான ஆவண படம் திரையிட்ட மாணவர்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது: வேல்முருகன் கண்டனம்

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: பிபிசி, இந்தியாவில் 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் தொடர்பான விசாரணை நடத்தி ஆவணப்படத்தை வெளியிட்டு இருந்தது. இதில், குஜராத் கலவரம் நடக்க அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியும் காரணம் என்பதை தகுந்த சான்றுகளோடு அம்பலப்படுத்தியுள்ளது. இந்நிலையில், மோடி தலைமையிலான பாசிச பாஜ அரசு, ஆவண படத்திற்கு தடை விதித்திருக்கிறது. சென்னை பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பினர் ஆவணப்படம் திரையிட்டுள்ளனர். இதை பல்கலைக்கழக நிர்வாகமும், காவல்துறையும் தடுத்ததுடன், செல்போனில் படம் பார்த்ததற்காக அவர்களை கைது செய்துள்ளது. அடிப்படை உரிமைக்கு எதிராக, பல்கலைக்கழக நிர்வாகமும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது. இத்தகைய போக்கை, தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. எனவே, ‘இந்தியா-மோடிக்கான கேள்விகள்’ எனும் குஜராத் படுகொலை குறித்தான பி.பி.சி. ஊடக நிறுவனத்தின் ஆவணப்படத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு சேர்க்கவும், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கவும் தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

Related Stories: