லாகூர்: பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் கட்சியின் மூத்த துணை தலைவர் மரியம் நவாஸ் 4 மாதங்களுக்கு பின் நேற்று லண்டனில் இருந்து நாடு திரும்பினார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் நவாஸின் மகளும், கட்சியின் துணை தலைவருமான மரியம் நவாஸ் மீது ஊழல் குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து கடந்த 2019ம் ஆண்டில் இருந்து உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை பார்க்கவில்லை என்றும் அவரை பார்ப்பதற்காக செல்வதாக கூறி கடந்த ஆண்டு அக்டோபரில் மரியம் நவாஸ் லண்டன் புறப்பட்டு சென்றார். நான்கு மாதங்களுக்கு பின் நேற்று அங்கு இருந்து அவர் பாகிஸ்தான் திரும்பினார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தனது கட்சியை வலுப்படுத்துவதற்காக மரியம் நாடு திரும்பியுள்ளார். நாடு திரும்பிய பின்னர் மரியம் தனது டிவிட்டரில், பாகிஸ்தான் வாழ்க” என பதிவிட்டு இருந்தார்.