×

ஏடிஎம்களில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் அபேஸ் கொள்ளையடிக்க சிறப்புப் பயிற்சி: கைதான குற்றவாளி பகீர் வாக்குமூலம்

சென்னை: எஸ்பிஐ டெபாசிட் இயந்திரத்தில் நூதன முறையில் கொள்ளையடித்த வடமாநில கும்பல் தலைவன் அமீரை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.  சென்னையில் ராமபுரம், விருகம்பாக்கம், வேளச்சேரி, தரமணி, வடபழனி, வேப்பேரி, பெரம்பூர், கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட 14 இடங்களில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் உள்ள டெபாசிட் இயந்திரத்தில் இருந்து ரூ.45 லட்சம் பணம் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுபோல் தமிழகம் முழுவதும் ரூ.1 கோடிக்கு மேல் இந்த மோசடி நடந்துள்ளது. இதுகுறித்து எஸ்பிஐ வங்கியின் சென்னை மண்டல தலைமை மேலாளர் ராதாகிருஷ்ணன் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை நேரில் சந்தித்து புகார் அளித்தார். புகாரின் படி திருட்டு நடந்த ஏடிஎம் மையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று போலீசார் விசாரணை நடத்தினர். அதில் 4 பேர் கொண்ட வடமாநில கும்பல் ஒன்று  தான் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கைவரிசை காட்டயது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க கூடுதல் கமிஷனர் கண்ணன் மற்றும் தி.நகர் துணை கமிஷனர் அரிகிரன் பிரசாத் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படையினர் செல்போன் சிக்னல் உதவியுடன் அரியானா சென்று அங்குள்ள போலீசார் உதவியுடன் பல்லப்கர்க் என்கிற கிராமத்தில் பதுங்கி இருந்த அமீர் அர்ஷ் (37) என்பவனை கைது செய்தனர். அவன் அளித்த தகவலின் படி மேலும் 2 குற்றவாளிகளை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.  இதையடுத்து முக்கிய குற்றவாளியான அமீர்அர்ைஷ மட்டும் தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கைது செய்யப்பட்ட அமீரிடம் தனிப்படை நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. விசாரணையின் போது குற்றவாளிஅமீர் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: அரியானாவிலிருக்கும் மேவாக் மாவட்டம் பல்லப்கர்க் கிராமத்தை சேர்ந்தவன் அமீர் அர்ஷ் (37). இவன் வடமாநில கொள்ளை கும்பலுடன் சேர்ந்து நாடுமுழுவதும் பெரிய அளவில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டிருக்கிறான். கொள்ளையடிக்கும் பணம் மற்றும் நகைகளில் 30 சதவிகிதம் இவனுக்கு கூலியாக கொடுக்கப்பட்டு வந்துள்ளது. அதை வைத்து கார், அதிநவீன பைக்குகளை வாங்கி, சொகுசு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறான். இதே வங்கியில் இந்த கொள்ளை கூட்டத்தை சேர்ந்த சிலர் தொழில் நுட்ப பிரிவில் உள்ளனர்.அவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதால் நிர்வாகம் பணி நீக்கம் செய்தது. அவர்கள் தான் தற்போது இந்த நூதன வங்கிக் கொள்ளைக்கு தலைமை வகித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த படித்த வாலிபர்களை தேர்வு செய்து ஏடிஎம் இயந்திரத்தில் குறிப்பட்ட விநாடிக்குள் ரகசிய குறியீட்டு எண் செலுத்திதான் பணத்தை எடுக்க முடியும். அதிக நேரம் ஆனால் வங்கியின் சர்வருக்கு பணம் திருடப்படுவது தெரிந்துவிடும்.இதற்கான பயிற்சி கொடுத்துள்ளனர். மேலும்இதற்காக இவர்களுக்குசம்பளம் வழங்கப்பட்டுள்ளது.  பல முறை பயிற்சி கொடுத்து ஆட்களை தமிழகத்திற்கு அனுப்பி உள்ளனர்.  வடமாநில கொள்ளையர்கள் அளித்த ஆலோசனைப்படி குறிப்பாக, ஜப்பான் நிறுவனம் ஒன்று தயாரித்து வழங்கிய டெபாசிட் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள ஏடிஎம்களை தேர்வு செய்து, இந்த நூதனக் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அரியானா மாநிலத்தில் இருந்து ரயில் மற்றும் விமானம் மூலம் வந்து கடந்த ஒரு மாதங்களாக சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சுற்றி குறிப்பிட்ட நிறுவனம் தயாரித்து வழங்கிய இயந்திரங்களைக் கணக்கெடுத்து, அதன் பிறகே திட்டமிட்டு கைவரிசை காட்டி வந்துள்ளனர். ஒரே ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தில் பலமுறை லட்சக்கணக்கில் பணத்தை எடுத்ததால்தான் வங்கியால் கண்டுபிடிக்க முடிந்தது. ஓரிரு முறை பணம் எடுத்து இருந்ததால் வங்கியால் இயந்திரத்தில் பணம் குறைவதை அவ்வளவு எளிதில் கண்டு பிடித்து இருக்க முடியாது. கொரோனா ஊரடங்குக் காரணமாக சென்னையில் அதிகளவில் போலீசார் சோதனை சாவடிகள் அமைத்து இருந்ததால், குற்றவாளிகள் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த வெவ்வேறு ஏடிஎம் மையங்களுக்குச் செல்ல முடியவில்லை. இதனால்தான் குறிப்பட்ட ஏடிஎம் மையங்களில் பணத்தை எடுத்து மாட்டிக் கொண்டதாக தெரிவித்துள்ளனர். இந்த நூதனக் கொள்ளையை கடந்த சில ஆண்டுகளாக வடமாநிலங்களில் வெற்றிகரமாக செய்திருக்கின்றனர். கொள்ளைக் கும்பல் தேர்வு செய்யும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் 4 பேர் அனுப்பி வைக்கப்பட்டு. இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அதன் மூலம் பல கோடி ரூபாய் திருடி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். வடமாநிலங்களில் திருடிய போது அங்குள்ள எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் எங்கள் மோசடியை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் சென்னையில் சிக்கிக் கொண்டோம் என்று கொள்ளையன் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்….

The post ஏடிஎம்களில் ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் அபேஸ் கொள்ளையடிக்க சிறப்புப் பயிற்சி: கைதான குற்றவாளி பகீர் வாக்குமூலம் appeared first on Dinakaran.

Tags : Abes ,Bagheer ,CHENNAI ,North State ,Ameer ,SBI ,Dinakaran ,
× RELATED பெண் சாப்ட்வேர் இன்ஜினியரிடம்...