குடியரசு தினத்தன்று வேலை 131 நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் ஆணையர் அதிரடி

சென்னை: சென்னை 2வது வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுபாஷ் சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தொழிலாளர் நலத்துறை அரசு செயலாளரும், தொழிலாளர் ஆணையருமான அதுல் ஆனந்த் ஆணைக்கிணங்க, சென்னை கூடுதல் தொழிலாளர் ஆணையர் உமாதேவி மற்றும் சென்னை தொழிலாளர் இணை ஆணையர் விமலநாதன் அறிவுரைப்படி, குடியரசு தின விடுமுறை நாளான கடந்த 26ம் தேதி கடைகள் மற்றும் உணவு, மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு மேற்கொண்டனர்.  

பணிக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்றுவிடுப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்ய தொழில் 173 நிறுவனங்களில் இந்த சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டது. இதில், 131 நிறுவனங்கள் முறையாக அறிவிப்பு வழங்கி முன்அனுமதி பெறாமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்தியது கண்டறியப்பட்டது. அந்த நிறுவன உரிமையாளர்களுக்கு சட்டப்படியான அறிவிப்பு வழங்கி மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து 171 நிறுவனங்களில் சிறப்பு ஆய்வு செய்ததில், 150 நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டு, அதன் உரிமையாளர்கள் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: