75வது சுதந்திர தின தொடர்ச்சி எதிரொலி சிறையில் இருந்து மேலும் 60 கைதிகள் விடுதலை: சிறை துறை அறிவிப்பு

சென்னை: இந்தியாவின் 75 வது ஆண்டு சுதந்திர தினத்தின் தொடர் நிகழ்வாக, சிறைகளில் நன்னடத்தையுடன் உள்ள கைதிகளை விடுதலை செய்யும் நடவடிக்கை தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், மேலும் நன்னடத்தை அடிப்படையில் மேலும் 60 கைதிகள் விடுக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த நடவடிக்கை தொடரும் என்று சிறை துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய சுதந்திர தினத்தின் 75 வது ஆண்டை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் இருக்கும் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று வந்த கோரிக்கையின் அடிப்படையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாக ஒரு ஆலோசனையை வழங்கி இருந்தது.

இதுவரை சுதந்திர தினத்தின் 75வது ஆண்டை கொண்டாடும் வகையில் இதுவரை பல கட்டங்களாக கைதிகள் நாடு முழுவதும் சிறைகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நன்னடைத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், தமிழகத்தில் பல்வேறு கட்டங்களாக நன்னடத்தை அடிப்படையில் சில நூறு கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில், தமிழக சிறையில் 66 சதவீத சிறைத்தண்டனை அனுபவித்து சிறைகளில் தண்டனை பெறாமல் நன்னடைத்தையோடு இருந்த மேலும் 60 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

அதன்படி, புழல் மத்திய சிறையில் இருந்து 11 பேர், வேலூர் 9, கடலூர் 12, திருச்சி 9, கோவை 12, மதுரை 1,பாளையங்கோட்டை 4 ,புழல் சிறப்பு பெண்கள் சிறைச்சாலையில் 1, கோவை சிறப்பு பெண்கள் சிறைச்சாலையில் இருந்து ஒரு பெண் கைதி என மொத்தம் 60 கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் முன்கூட்டியே நேற்று விடுவிக்கப்பட்டனர். விடுவிக்கப்பட்ட கைதிகளுக்கு இனிப்புகள் மற்றும் மளிகை பொருட்கள் சிறைத்துறை சார்பில் வழங்கப்பட்டது. இந்த 75வது சுதந்திர தின விழாவையொட்டி இந்த ஆண்டு முழுவதும் சிறை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டு கொண்டே இருப்பார்கள் என்று சிறை துறை அதிகாரிகள் கூறினர்.

Related Stories: