×

பழனி முருகன் கோயில் குடமுழுக்கை தொடர்ந்து ஆகம விதிப்படியே மண்டல பூஜை நடைபெறுவதாக ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: பழனி முருகன் கோயில் குடமுழுக்கை தொடர்ந்து ஆகம விதிப்படியே மண்டல பூஜை நடைபெறுவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. தைப்பூசத் திருவிழாவால் மண்டல பூஜை எந்த விதத்திலும் தடைபடாது என தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் விளக்கமளித்துள்ளார்.

தைப்பூசத் திருவிழாவால் பழனி முருகன் கோயிலில் மண்டலா பூஜை பெயரளவில் நடைபெறுவதாக டி.ஆர்.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆகம விதிப்படி மண்டல பூஜைகள் நடைபெறவில்லை என மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்திஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆகம விதிப்படியே மண்டல பூஜைகள் நடைபெற்றுவருவதாக அவர் கூறினார். குறிப்பாக 11 கலசங்கள் வைத்து 48 நாட்களும் மண்டல பூஜை நடைபெறும் என்றும் அதன் பின்னர் 108 சங்கு பூஜை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

தைப்பூச திருவிழாவால் மண்டல பூஜைகள் எதுவும் பாதிக்கப்படாது என்றும், உரிய ஆகம விதிப்படியே அனைத்து நடைபெற்றுவருவதாக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் இந்த வலக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.


Tags : Government of Tamil Nadu ,Ikordt ,Palani Murugan Temple Kudamuku ,Akama ,Zone Puja , Palani Murugan Temple, Mandal Pooja as per Agama Rules, Tamil Nadu Govt Information in High Court
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...