ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 286 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அலுவலரிடம் ஒப்படைப்பு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்காக 286 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தார். மொத்தம் 238 வாக்குச்சாவடி மையத்தில் பயன்படுத்த சுமார் 1408 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

தேர்தல் நடத்தும் அலுவலரிடம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒப்படைக்கப்பட்டது. வாக்கு இயந்திரங்களுடன் கூடுதலாக 20 சதவீதம்  கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 30 சதவீதம் கூடுதலாக விவிபேட் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 286 கட்டுப்பட்டு இயந்திரங்கள், 286 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 310 விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

பிப்ரவரி 27-ல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்குப்பதிவுக்காக 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 238 வாக்குச்சாவடிகளிலும் மொத்தமாக 882 இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

Related Stories: