×

55 பயணிகளை விட்டுவிட்டு சென்ற விமான நிறுவனத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம்

புதுடெல்லி: பெங்களூருவில் இருந்து டெல்லி செல்லும் விமான பயணிகளை விமான நிலையத்தில் விட்டுவிட்டு சென்ற, கோ ஃபர்ஸ்ட் விமான நிறுவனத்திற்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து கடந்த 9ம் தேதி டெல்லிக்கு புறப்பட்ட கோ ஃபர்ஸ்ட் விமானம், தனது 55 பயணிகளை விமான நிலையத்தின் டர்மாக்கில் அப்படியே விட்டு விட்டு புறப்பட்டு சென்றது.

இந்த விமானம் கிளம்பியதும், அதன் பயணிகள் தங்கள் கோபத்தை சமூக ஊடகங்களில்  கடுமையாக வெளிப்படுத்தினர். இது தொடர்பாக விளக்கம் கேட்டு அந்நிறுவனத்துக்கு விமான போக்குவரத்துக் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில், நேற்று அந்நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

இதுகுறித்து விமான போக்குவரத்து இயக்குநரகம் கூறுகையில்:
கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் அனுப்பிய பதிலிலிருந்து அந்நிறுவனம் பயணிகளை ஏற்றுவதில் எவ்வளவு அலட்சியமாக செயல்பட்டுள்ளது என்பது தெரிகிறது. பயணிகளை ஏற்றுவதிலும், பயணிகளின் லக்கேஜ்களை நிர்வகிப்பதிலும் போதிய ஏற்பாட்டை கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் செய்யவில்லை. இந்த விதிமீறலால் அந்நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது’ என்று தெரிவித்துள்ளது.

Tags : Airline fined Rs 10 lakh by Directorate of Civil Aviation
× RELATED மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள...