×

10 லட்சமாவது பைக் கேடிஎம் புதிய மைல்கல்

சென்னை: கேடிஎம் நிறுவனம், பஜாஜ் நிறுவன ஆலையில் 10 லட்சமாவது பைக்கை உற்பத்தி செய்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. பிரீமியம் மோட்டார் சைக்கிள் பிராண்டான கேடிஎம் நிறுவனம், பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து மோட்டார் பைக் உற்பத்தி செய்து வருகிறது. புனேயில் பஜாஜ் நிறுவனத்துக்கு சொந்தமான சக்கன் ஆலையில் இந்த பைக்குகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கண்ட ஆலையில் 10 லட்சமாவது கேடிஎம் பைக் உற்பத்தி செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், புதிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது.

இந்த சாதனை கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி ராஜீவ் பஜாஜ், ‘‘மோட்டார் சைக்கிள்கள்தான் எங்கள் பலம். 10 லட்சமாவது மோட்டார் சைக்கிள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதன் மூலம் இது நிரூபணம் ஆகியுள்ளது. உலகம் முழுவதும் அனைவரும் வாங்கத்தக்க வகையில் கண்டுபிடிப்புகளை சந்தைப்படுத்துவதை இலக்காகக் கொண்டு , கேடிஎம் மற்றும் பஜாஜ் இடையே 2007ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது’’ என்றார். கேடிஎம் பைக் நிறுவனமான பைரர் மோபிலிடி ஏஜியின் முதன்மை செயல் அதிகாரி ஸ்பீபன் பைரர் கூறுகையில், ‘‘இது எங்கள் இருவருக்கும் மிக முக்கியமான தருணம்’’ என்றார்.


Tags : KTM , 10 lakh bike is a new milestone for KTM
× RELATED புதிய கேடிஎம் டியூக் பைக்குகள்