×

மயோசிடிஸிலிருந்து மீள்கிறார் உடற்பயிற்சி வீடியோ வெளியிட்ட சமந்தா

சென்னை: மயோசிடிஸிலிருந்து மீண்டு வரும் சமந்தா, உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன் படப்பிடிப்பில் இருந்தபோது சமந்தா மயங்கி விழுந்தார். பரிசோதனையில் அவருக்கு மயோசிடிஸ் என்ற தசை அழற்சி பாதிப்பு இருப்பது தெரிந்தது. இதற்காக அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து 4 மாதங்கள் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் இந்தியில் சிட்டாடல் என்ற வெப்சீரிஸில் நடிக்க சமீபத்தில்தான் மும்பைக்கு சென்றார்.

பிறகு அவர் நடித்து வரும் யசோதா என்ற பான் இந்தியா படத்தின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்நிலையில் தற்போது உடற்பயிற்சிகளில் ஈடுபட தொடங்கியுள்ளார். மயோசிடிஸ் பாதிப்பிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி இன்ஸ்டாகிராமில் அவர் கூறும்போது, ‘நான் இப்போது ஆட்டோ இம்யூன் டயட் என்ற டயட்டில் இருக்கிறேன். இந்த டயட் எனக்கு கற்றுக் கொடுத்தது என்னவெனில் வலிமை என்பது நீங்கள் சாப்பிடுவது அல்ல. நீங்கள் எப்படி நினைக்கிறீர்கள் என்பதுதான்’  என தெரிவித்துள்ளார்.

Tags : Samantha , Samantha released an exercise video to recover from myositis
× RELATED எல்லா பிரச்னைகளில் இருந்தும் விடுபட்டுள்ளேன்: சமந்தா மகிழ்ச்சி