×

பாடகர்கள் இணைந்து உருவாக்கிய ‘இது நம்ம இசை’

சென்னை: திரைப்படப் பின்னணி பாடகர், பாடகிகள் இணைந்து ‘இது நம்ம இசை’ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர். இதில், தமிழ்நாட்டின் இசை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன், பாடகர் அறிவு ஒருங்கிணைத்துள்ள இந்த ஆல்பத்தை கோக் ஸ்டுடியோவின் கிளை நிறுவனமான ‘கோக் ஸ்டுடியோ தமிழ்’ தயாரித்து வெளியிடுகிறது.

இதில் சின்மயி, பென்னி தயாள், கதீஜா ரஹ்மான், கானா விமலா, கானா உலகநாதன், புஷ்பவனம் குப்புசாமி, ஜானு, முத்தம்மாள், முத்தையா, அரிபுல்லா ஷா ரஃபே, சஞ்சய் சுப்பிரமணியம், மீனாட்சி இளையராஜா பாடியுள்ளனர். இந்த ஆல்பம் இசைக்கான ஓடிடி தளங்களில் வெளியிடப்படுகிறது.


Tags : 'Itu Namma Music' created by the singers
× RELATED கள்ளக்காதல் விவகாரத்தில் தீ வைத்து...