அஜர்பைஜான் தூதரக அதிகாரி சுட்டு கொலை: ஈரானில் பயங்கரம்

துபாய்: ஈரானில் உள்ள அஜர்பைஜான் தூதரக பாதுகாப்பு அதிகாரி பட்டப்பகலில் சுட்டு கொல்லப்பட்டார். ஈரான், டெஹ்ரானில் அஜர்பைஜான் தூதரகம் உள்ளது. இந்நிலையில் நேற்று தூதரகத்தின் சோதனை சாவடியை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார்.

இதில்  தலைமை பாதுகாப்பு அதிகாரி உயிரிழந்தார்.  2 வீரர்கள் படுகாயமடைந்தனர்.  இது தீவிரவாத தாக்குதல் என்று அஜர்பைஜான் கூறியுள்ள நிலையில், தனிப்பட்ட பிரச்னைகளால் அவர் சுட்டு கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.

Related Stories: