ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் 2வது இடத்துடன் விடைபெற்றார் சானியா

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவில் சக வீரர் ரோகன் போபண்ணாவுடன் இணைந்து 2வது இடம் பிடித்த இந்திய நட்சத்திரம் சானியா மிர்சா, கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் இருந்து விடைபெற்றார். இறுதிப் போட்டியில் பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி - ரபேல் மேடோஸ் ஜோடியுடன் நேற்று மோதிய சானியா - போபண்ணா ஜோடி 6-7 (2-7), 2-6 என்ற நேர் செட்களில் போராடி தோற்றது. இப்போட்டி 1 மணி, 27 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

ஆஸ்திரேலிய ஓபனே தான் விளையாடும் கடைசி கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டி என்று ஏற்கனவே அறிவித்திருந்த சானியா, 2வது இடம் பிடித்த திருப்தியுடன் கண்ணீர் மல்க ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார். மகளிர் டென்னிசில் இந்தியாவின் அடையாளமாக, சாதனை வீராங்கனையாக உலகப் புகழ் பெற்ற சானியா மகளிர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் மொத்தம் 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: