1ம் தேதி வேட்பாளர் அறிமுக கூட்டம்: தேமுதிக தலைமை அறிவிப்பு

சென்னை: தேமுதிக தலைமை வெளியிட்ட அறிக்கை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கு தேமுதிக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆனந்த் அறிமுகம் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் ஈரோடு மாநகர் மாவட்டத்தில் சிஎன்சி கல்லூரி எதிரில் வரும் 1ம் தேதி புதன்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெறும். இந்த கூட்டத்திற்கு தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: