சத்தியமங்கலத்தில் பவானி ஆற்று பாலம் இடிந்து ஆற்றில் விழும் காட்சி சமூக வலைதளங்களில் வைரல்..!

ஈரோடு: சத்தியமங்கலத்தில் பவானி ஆற்று பாலம் இடிந்து ஆற்றில் விழும் காட்சி இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சத்தியமங்கலம் நகர் பகுதியில் நடுவே ஓடும் பவானி ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய பாலம் உள்ளது. வாகன போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பு காரணமாக பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் 11 கோடி ரூபாய் செலவில் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் ஆங்கிலேயர் காலத்து பழைய பாலத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இன்று பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி பாலம் இடிக்கும் பணி நடைபெறும் போது திடீரென பாலம் இடிந்து வரிசையாக  தூண்களின் குறுக்கே உள்ள பாலத்தின் கட்டிடப் பகுதி பவானி ஆற்றில் விழுந்தது. புவியீர்ப்பு விசையின் காரணமாக அதிவேகத்தில் விழுந்ததால் பவானி ஆற்று நீர் சுமார் 50 அடி உயரத்திற்கு மேலே எழும்பி சிதறியது. இந்த காட்சியை அப்பகுதியில் உள்ளவர்கள் செல்போனில் வீடியோ எடுத்து வாட்ஸ் அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

Related Stories: