ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்: எடப்பாடி பழனிசாமி பேட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் பேட்டி அளித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடுவது யார் என்பது குறித்து முடிவு செய்ய ஈரோட்டில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி 2வது நாளாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இன்றைய ஆலோசனைக்குப் பின் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையில் பங்கேற்றனர்.

அதிமுகவில் கூடுதலாக மேலும் 6 பேரை தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமித்து ஈபிஎஸ் அறிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தேர்வு செய்யப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் தென்னரசு போட்டியிட அதிக வாய்ப்பு என கூறப்படுகிறது.

Related Stories: