நியூ பிரின்ஸ் பள்ளி அறிவியல் கண்காட்சி: அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கினார்

ஆலந்தூர்: சென்னை அருகே உள்ளகரத்தில் உள்ள நியூ பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மற்றும் நியூ பிரின்ஸ் பவானி சீனியர் செகண்டரி பள்ளி மாணவர்களின் அறிவியல், கலை மற்றும் கைவினை பொருட்கள் கண்காட்சியை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் எம்பி ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்று துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சிக்கு கல்வி குழுமங்களின் தலைவர் கே.லோகநாதன் தலைமை தாங்கினார். செயலாளரும், பள்ளி முதல்வருமான மகாலட்சுமி, துணை தலைவர்கள் எல்.நவீன்பிரசாத், எல்.அர்ச்சனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் மேட்டில்டா மார்க், நியூ பிரின்ஸ்  பவானி சீனியர் செகண்டரி பள்ளி தலைமை ஆசிரியர் வீணா இளங்கோவன் ஆகியோர் வரவேற்றனர்.

இக்கண்காட்சியில் பள்ளி மாணவர்களின் அறிவியல் படைப்புகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார். இதைத் தொடர்ந்து பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில் ₹62 ஆயிரம் மதிப்பிலான கல்வி ஊக்கத்தொகை, சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இதில் எம்எல்ஏக்கள் எஸ்.அரவிந்த் ரமேஷ், தாயகம் கவி, மண்டல குழுத்தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜே.கே.மணிகண்டன், ஷர்மிளா தேவி திவாகர், செயலாளர் திவாகர்,  எம்.தமிழ் செல்வன், பேராசிரியர் ரகு, கல்வி ஆலோசகர்கள் கே.பார்த்தசாரதி, ரேமண்ட் கார்னியில், நெஸ்லின் கார்னெய்ல், சி.டி.மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: