சென்னை தி.நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலை மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்து: காயங்களுடன் மருத்துவ கல்லூரி மாணவி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னை தியாகராயநகர் மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலை மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அருகில் இருந்த வாகன ஓட்டிகள் மாணவியை மீட்டு பின்னர், போலீசாருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயங்களுடன் இருந்த கல்லூரி மாணவியை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

விசாரணையில் ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மாணவி, கோடம்பாக்கத்தில் இருந்து தியாகராயர் வழியாக கல்லூரிக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து நேரிட்டது தெரிய வந்தது. அதிவேகமாக சென்றதால் விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: