×

காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது, அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

சென்னை: நிலநடுக் கோட்டை ஒட்டிய இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அடுத்த 3 நாட்களில் மேற்கு- வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை மையம் தகவல் தெரிவிட்ர்ஹத்துள்ளது. இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும், ஓரிரு இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், அதனை ஓட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவிக்கப்படுகிறது. 30-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் நிலநடுக் கோட்டை ஓட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நாளை மறுநாள் மற்றும் 30-ம் தேதி இலங்கையை ஓட்டிய தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இதனிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும், குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : Meteorological , Low pressure area forming today, rain likely for next 2 days: Meteorological Center Information!
× RELATED நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை...