×

சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை சார்பில் புதிய வலைதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நிதித்துறை சார்பில் புதிய வலைதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதி வழங்கும் திட்டத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதன் முதற்கட்டமாக 5 நிறுவனங்களுக்கு அனுமதி கடிதங்களை முதல்வர் வழங்கினார். அதேபோல் மாநில பொதுத்துறை நிறுவனங்களுடைய செயல்பாடுகளை கண்காணிப்பதற்காகவும், முறைகேடுகளை முற்றிலும் தவிர்ப்பதற்காகவும் உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய ccfms என்ற இணையதள செயல்பாட்டையும் முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்.

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் அதனுடைய வரவுகள் ஆகியவை தொடர்பான வெளிப்படை தன்மையான செயல்பாடுகள் என நிதித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.    

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்ளியிட்டோர் கலந்து கொண்டனர்.


Tags : Chief Minister ,M.K.Stalin ,Finance Department ,Chennai Chief Secretariat , Chief Minister M.K.Stalin launched a new website on behalf of the Finance Department at Chennai Chief Secretariat
× RELATED சொல்லிட்டாங்க…