கோடம்பாக்கம் மண்டலத்தில் ரூ.16.66 லட்சம் மதிப்பில் அங்கன்வாடிகள் சீரமைப்பு

கோடம்பாக்கம்: கோடம்பாக்கம் மண்டலத்தில், ரூ. 16.66 லட்சம் மதிப்பில், ஐந்து அங்கன்வாடி கட்டடங்களை சீர் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலத்தில் விருகம்பாக்கம், அசோக் நகர், ஜாபர்கான்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அங்கன்வாடி கட்டடங்கள், பழுதடைந்த நிலையில் உள்ளன.

எனவே, இவற்றில் மராமத்துப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது இதையடுத்து, 135வது வார்டு அசோக் நகர், 30வது தெருவில் உள்ள அங்கன்வாடி கட்டடத்தை, ரூ. 3.60 லட்சம் மதிப்பில் பழுது பார்த்து மேம்படுத்தும் பணியை மேற்கொள்ள, ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

இதேபோல, 134வது வார்டில் உள்ள பிருந் தாவன் தெரு குடிசைப் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மைய கட்டடம், ரூ. 1.66 லட்சம் மதிப்பிலும் 132வது வார்டு காமராஜர் காலனி மூன்றாவது தெருவில் உள்ள அங்கன் வாடி, ரூ. 3.73 லட்சம் மதிப்பிலும் சீர் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மேலும் 139வது வார்டு ஜாபர்கான்பேட்டை ஆர்.வி.நகரில் உள்ள அங்கன்வாடி, ரூ. 1.66 லட்சம் மதிப்பிலும் 135வது வார்டு அசோக் நகர், 77வது தெருவில் உள்ள அங்கன்வாடி ரூ. 6.01 லட் சம் என, மொத்தம் ரூ. 16.66 லட்சம் மதிப்பில், மேற்கண்ட ஐந்து அங்கன்வாடிகளை சீர் செய்ய ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

Related Stories: