சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து அமமுக நிர்வாகிகளுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளரை டிடிவி தினகரன் அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.