×

ஹைதியில் வன்முறையில் குதித்த காவல்துறையினர்: ஆயுத கும்பலால் காவலர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு

போர்ட் ஓ பிரின்ஸ்: ஆயுதம் ஏந்திய சமூக விரோத கும்பலால் காவல் துறையினர் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹைதியில் காவலர்களின் ஒரு பிரிவினர் வன்முறையில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த வாரம் ஹைதி தலைநகர் போர்ட் ஓ பிரின்ஸில் ஆயுதம் ஏந்திய கலகக்காரர்களால் காவல் அதிகாரிகள் 4 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து லியான் கோர்ட் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு தாக்குதல் 7 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

இந்த படுகொலைகள் குறித்து ஹைதி அரசு விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் சாதாரண உடையில் இருந்த காவல்துறையின் ஒரு பகுதியினர் திடீரென வன்முறையில் குதித்தனர். சாலைகளில் டயர்களை தீயிட்டு கொளுத்திய அவர்கள் போக்குவரத்தை முடக்கினர். பின்னர், பிரதமர் ஏரியல் ஹென்றியின் அலுவலகத்திற்குள் புகுந்து காவலர்கள் சூறையாடினர். அர்ஜெண்டினா சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் நாடு திரும்புவதை அறிந்த அவர்கள் விமான நிலையத்தை முற்றுகையிட்டு தாக்குதலில் பெரும் பதற்றம் நிலவியது.  


Tags : Haiti , Haiti, violence, police, weapons, gangs, protest
× RELATED ஆயுதக்குழுக்களின் ஆதிக்கத்தால்...