×

பூங்கா அமைத்தல், நீர்நிலை மேம்படுத்துதல் பசுமை வெளிகள் அமைக்க ரூ.1083.18 கோடி நிதி ஒதுக்கீடு: நகராட்சி நிர்வாக துறை அறிவிப்பு

சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை  வெளியிட்ட அறிக்கை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானிய கோரிக்கையை தொடர்ந்து ,அம்பாசமுத்திரம் குடிநீர் திட்டம் ரூ.36.60 கோடி திட்ட மதிப்பீட்டிலும், சிதம்பரம் குடிநீர் திட்டம் ரூ.143.19 கோடி திட்ட மதிப்பீட்டிலும், துறையூர் குடிநீர் திட்டம் ரூ.108.90 கோடி திட்ட மதிப்பீட்டிலும்,  ஓசூர் மாநகராட்சியில் இரண்டு கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன் கூடிய பாதாள சாக்கடை திட்டம்  ரூ.574.96  கோடி திட்ட மதிப்பீட்டிலும் தூத்துக்குடி மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் ரூ.152.14 கோடி திட்ட மதிப்பீட்டிலும், திருவேற்காடு, வந்தவாசி, ஜோலார்பேட்டை, வேதாரண்யம்,

அறந்தாங்கி உள்ளிட்ட நகரங்களில் 72 பசுமை வெளிகள் மற்றும் பூங்காக்கள் அமைப்பதற்கு ரூ.27.80 கோடி மதிப்பீட்டிலும், குன்றத்தூர், வடலூர், ராஜபாளையம், முசிறி, ராமேஸ்வரம் உள்ளிட்ட நகரங்களில் 54 நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கான பணிகள் ரூ.39.59 கோடி மதிப்பீட்டிலும் ஒட்டுமொத்தமாக ரூ.1083.18 கோடியில் ஒன்றிய அரசு மானியமாக ரூ.361.68 கோடியும்,  மாநில  அரசு மானியமாக ரூ.294.60 கோடியும் உள்ளாட்சிகளின் பங்களிப்பாக ரூ.426.90 கோடியும் உள்ளடக்கி நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 131 பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிடப்பட்டு அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Administration Department , Allocation of Rs.1083.18 Crores for Construction of Parks, Improvement of Watersheds and Green Spaces: Notification of Municipal Administration Department
× RELATED சென்னை உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில்...