எல்ஐசி அலுவலகத்தில் குடியரசு தின விழா

சென்னை: சென்னை அண்ணா சாலையிலுள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில், 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு தென் மண்டல மேலாளர் ஜி.வெங்கடரமணன் தேசிய கொடியை ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது, தனி நபர் மற்றும் குழு காப்பீடு பாலிசிகளின் உரிமங்களை அளிப்பதில் எல்ஐசி தென் மண்டலம் முதன்மையாக இருப்பதை பாராட்டினார். மேலும், அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய பாலிசிகள் பற்றியும், பாலிசிதாரர்களுக்கு சிறந்த சேவைகளை அளிக்க எல்ஐசி எடுத்துள்ள டிஜிட்டல் முன்னெடுப்புக்கள் பற்றியும் விளக்கினார்.

குறிப்பாக, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள எல்ஐசியின் ஜீவன் ஆசாத் (குறிப்பிட்ட கால பிரீமியம் செலுத்தும் எண்டோமென்ட்) திட்டத்தை அதிகளவில் மக்களிடம் கொண்டு செல்லும்படி கேட்டுக்கொண்டார். பாலிசி புதுப்பித்தலிலும் எல்ஐசி தென் மண்டலம் முதன்மையிடத்தில் இருப்பதை மண்டல மேலாளர் பாராட்டினார். வாடிக்கையாளர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் புதிய முயற்சியின் மூலம் தென் மண்டலம் இதுவரை 87 லட்சம் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பிரிமியம் செலுத்த மற்றும் பிற சேவைகளுக்காக நினைவூட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Stories: