×

செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி சகோதரர்கள் பலி

பூந்தமல்லி: பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் சச்சின் (13), தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர்களது உறவினர் வேலுமணியிம் நடிஷ் (13). அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். இந்த இரண்டு சிறுவர்களும் அண்ணன், தம்பி உறவு முறையாகும். இருவரும் நேற்று மாலை செம்பரம்பாக்கம் ஏரியில் குளிக்க சென்றுள்ளனர்.

செம்பரம்பாக்கம் ஏரியின் கரையில் அமர்ந்து குளித்து கொண்டிருந்த போது திடீரென இருவரும் நிலை தடுமாறி நீரில் மூழ்கி உள்ளனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி தத்தளித்துள்ளனர். இதனை கண்டதும் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலறிந்து வந்த உறவினர்கள், ஏரியில் குதித்து தேடி நடீசை சடலமாக மீட்டனர். பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்துக்கு பின் சச்சின் உடலை மீட்டனர்.


Tags : Sembarambakkam Lake , Brothers drowned in Sembarambakkam lake
× RELATED தலை, உடலை துண்டு துண்டாக வெட்டி...