×

இன்ஜினியர், டாக்டர்போல் விவசாயிகளும் தேவை; உழவன் பவுண்டேஷன் விழாவில் கார்த்தி பேச்சு

சென்னை: இந்த ஆண்டுக்கான உழவர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர் சிவகுமார், ராஜ்கிரண், இயக்குனர், பாண்டிராஜ், பொன்வண்ணன், மருத்துவர் கு.சிவராமன், ஐஏஎஸ் அதிகாரி பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கார்த்தி பேசியதாவது: சின்ன சின்ன ஊர்களில் எதையும் எதிர்பார்க்காமல் அதிசயங்கள் நிகழ்த்துபவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் பரிசுக்காகவும், நாம் அழைத்து பாராட்டுவதற்கும் செய்யவில்லை. அப்படிபட்டவர்களை அழைத்து வந்து நமது குழந்தைகளுக்கு, இவர்கள் தான் நமது கதாநாயகர்கள், இவர்கள் தான் நம்முடைய சமூகத்திற்கு தேவைப்படுபவர்கள் என்று அடையாளப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் உழவர் விருதுகளை வழங்கி வருகிறேன்.

இப்போது உணவு உற்பத்தி 2 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக குறைந்துகொண்டே வருகிறது என்று கூறுகிறார்கள். இருப்பினும் இன்னும் நமக்கு உணவு கிடைக்கிறதென்றால், விவசாயத்தை விட மாட்டேன், போராடியே தீருவேன் என்று ஒரு தலைமுறையே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதுதான் காரணம். அந்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறை தயாராக இருக்கிறதா என்று கேட்டால், பயமாகத்தான் இருக்கிறது. அதை நாம்தான் தயார் செய்தாக வேண்டும். மருத்துவராக இரு, பொறியாளராக இரு, கலெக்டராக கூட இரு, ஆனால் விவசாயியாகவும் இரு என்பதுதான்  இப்போதைய தேவை.

Tags : Doctorpol ,Karthi ,Toddler Foundation Festival , Engineers, doctors and farmers are also needed; Karti speech at Uzhavan Foundation function
× RELATED ஆணையம் தன்னிச்சையாக முடிவெடுக்கக் கூடாது: கார்த்தி சிதம்பரம்