பாஜ வளரவில்லை அதிமுகவின் நிலைமைக்கு டெல்லிதான் காரணம்: போட்டு உடைத்த டிடிவி

புதுக்கோட்டை மாவட்டம், கடியாப்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகிகளோடு ஆலோசனை கூட்டம் நடத்திய பின்னர் வேட்பாளர் அறிவிக்கப்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை. இப்போது உள்ள நடைமுறையை பார்த்தால் இந்த இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருப்பது போல் தெரியவில்லை.

அதிமுக இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டதற்கு டெல்லி மேலிடம் தான் காரணம். மீண்டும் அதிமுக ஒன்று சேர்வது அவர்கள் நினைத்தால் மட்டுமே முடியும். அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக பாஜக தலைமை என்னை அழைத்தால் அப்போது அது குறித்து நான் முடிவெடுப்பேன். பாஜக வளர்ந்து வருகிறது என்று சொல்ல முடியாது. ஒரு கட்சி வளர்வது மக்களின் கையில் தான் உள்ளது. கமல்ஹாசன் ஏற்கனவே காங்கிரசுடன் செல்வதற்கு முடிவெடுத்துவிட்டார். அதனால் தான் ராகுல் காந்தி நடை பயணத்தில் கலந்து கொண்டார். தற்போது அதை உறுதி செய்யும் வகையில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: