அலுவலகத்திற்கு உள்ளேயே பாலியல் சீண்டல் ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் பணியிறக்கம்

சென்னை: காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயில் அலுவலக வளாகத்திலேயே பாலியல் சீண்டலில் ஈடுபட்ட செயல் அலுவலர் பதவி இறக்கம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கும் உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், செயல் அலுவலராக வேதமூர்த்தி இருந்தார். இவர் கோயில் அலுவலகத்தில் பெண் ஊழியரிடம் அத்துமீறி நடந்து கொண்டார். இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து இணை ஆணையர் வான்மதி, கோயில் செயல் அலுவலர் மற்றும் கோயில் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு அறிக்கையை துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், ஏகாம்பரநாதர் கோயில் செயல் அலுவலர் வேதமூர்த்தியை செயல் அலுவலர் பதவியிலிருந்து பணியிறக்கம் செய்து, அறப்பணியாளராக மாற்றம் செய்து, திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு அனுப்ப உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோயில் செயல் அலுவலர் முத்துலட்சுமி, ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மாற்றம் செய்து, இந்து சமய அறநிலை துறை ஆணையர் குமரகுருபரன் ஆணை பிறப்பித்துள்ளார்.

Related Stories: