இம்ரான்கான் பாதுகாப்பு வாபஸ்

லாகூர்: பாகிஸ்தானில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான், விரைவில் தேர்தல் நடத்த வலியுறுத்தி வாரிஸாபாத்தில் நடந்த தெஹ்ரிக் இ இன்சாப் கட்சிப் பேரணியில் கலந்து கொண்டார். அப்போது, அவரது வாகனத்தை நோக்கி இளைஞர் ஒருவர் சுட்டார். இதில் அவரது காலில் குண்டு அடி காயம் ஏற்பட்டது. இதையடுத்து அம்மாகாண அவருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கி வந்தது.

அரசு தேர்தலை விரைவில் நடத்தாததால் பஞ்சாபில் ஆளும் கட்சியாக இருந்த தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் அமைச்சரவை கலைக்கப்பட்டது. தற்போது அங்கு காபந்து அரசு நடந்து வருகிறது. இந்நிலையில், இம்ரானுக்கு அளிக்கப்பட்டு வந்த கூடுதல் பாதுகாப்பை காபந்து அரசு திரும்ப பெற்றது. இதையடுத்து லாகூரில் உள்ள இம்ரானின் ஜமான் பார்க் இல்லத்தின் முன்பு, அவருக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கவும், அவர் கைது செய்யப்படுவதை தடுக்கவும் அவரது கட்சி தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டனர்.

Related Stories: