நாமக்கல்லில் துப்பாக்கியுடன் பீகார் வாலிபர்கள் கைது

பள்ளிபாளையம்: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வால்ராசபாளையத்திற்கு, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வந்த 2 வாலிபர்கள், நூற்பு ஆலைகளுக்கு வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து வேலைக்கு சேர்த்துவிடும் ஏஜெண்டுகள் என சொல்லி, அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு பிடித்து தங்கியுள்ளனர். அவர்கள் மீது அப்பகுதி மக்களுக்கு சந்தேகம் எழுந்தது.

புகாரின்பேரில், வெப்படை போலீசார் நேற்று அவர்களது வீட்டிற்குள் புகுந்து இருவரையும் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த மணீஸ்குமார்(26), ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சாகர்(19) என்பது தெரியவந்தது. அவர்கள் வைத்திருந்த பெட்டியை சோதனை செய்த போது, ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 8 தோட்டாக்கள் இருந்தது. அதை பறிமுதல் செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Related Stories: