சுற்றுலா அலுவலர் தேர்வுக்கான விண்ணப்பம்

சென்னை: சுற்றுலா அலுவலர் தேர்வுக்கு பிப்ரவரி 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு பொதுப்பணியில் சுற்றுலா அலுவலர் பதவியில் காலியாக உள்ள 3 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சியின் இணையதளம் www.tnpscexams.in, www.tnpsc.gov.in வாயிலாக அடுத்த மாதம் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையவழி விண்ணப்பம் திருத்தம் செய்ய அடுத்த மாதம் 28ம் தேதி பகல் 12.01 மணி முதல் மார்ச் 2ம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

எழுத்து தேர்வு ஜூன் 10, 11ம் தேதிகளில் நடைபெறும். 10ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வு (கட்டாய தமிழ் மொழி தகுதி தாள்), பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வும், 11ம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை 3ம் தாள் தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 4ம் தாள் தேர்வும் நடைபெறும். எழுத்து தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும். தேர்வுக்கான கல்வித்தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Related Stories: