×

சென்னை உஸ்மான் சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் காரணமாக 9 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம்: சென்னை போக்குவரத்து காவல் அறிவிப்பு

சென்னை: சென்னை உஸ்மான் சாலையில் மேம்பாலம் கட்டுமான பணிகள் காரணமாக 9 மாதங்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யபப்டுவதாக  சென்னை போக்குவரத்து காவல் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; சென்னை பெருநகர மாநகராட்சி தெற்கு உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து அண்ணாசாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு வரை மேம்பாலம் கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டியிருப்பதால் தெற்கு உஸ்மான் சாலை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 28.01.2023 முதல் 27.09.2023 வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகின்றது.

தெற்கு உஸ்மான் சாலை அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
* தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, கண்ணமாபேட்டை சந்திப்பு, தெற்கு மேற்கு போக்கு சாலை, மூப்பராயன் தெரு, இணைப்பு சாலை வந்து அண்ணாசாலை அடையலாம்.

* தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்திலிருந்து வரும் மாநகர பேருந்துகள் தெற்கு உஸ்மான் சாலை வழியாக செல்ல தடை செய்யப்பட்டு, மேட்லி சந்திப்பு, பார்கிட் சாலை, மூப்பராயன் தெரு,  இணைப்பு சாலை வந்து அண்ணாசாலை அடையலாம்.

* அரங்கநாதன் சுரங்கபாதையில் இருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக அண்ணாசாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, மேற்கு சி.ஐ.டி நகர் வடக்கு தெரு வழியாக வந்து அண்ணாசாலை அடையலாம்.

* அண்ணாசாலை சி.ஐ.டி 1வது மெயின் ரோடு சந்திப்பிலிருந்து தெற்கு உஸ்மான் சாலை வழியாக தியாகராயநகர் பேருந்து முனையத்திற்கு செல்லும் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம். அனைத்து வாகன ஓட்டுனர்களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொண்டுள்ளது.


Tags : Uzman Road ,Chennai , Change in traffic for 9 months due to flyover construction work on Chennai Usman Road: Chennai Traffic Police Notification
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...