தமிழர்களை தாக்கும் வட இந்திய தொழிலாளர்கள்: வைரலாகும் வீடியோ

திருப்பூர்: திருப்பூரில் தமிழர்களை தாக்கும் வட இந்திய தொழிலாளர்களின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் இயங்கி வரக்கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது வட இந்தியாவை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் வந்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

வட இந்திய தொழிலாளர்கள் மற்றும் தமிழ் தொழிலாளர்கள் இடையே அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு வரக்கூடிய சூழ்நிலையில் கடந்து பொங்கல் பண்டிகையின் போது திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பின்லாடை நிறுவனத்தில் பணிபுரிந்த வட இந்திய தொழிலாளர்கள் மற்றும் திருப்பூரைச் சேர்ந்த தொழிலாளர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதில் இரு தரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: