பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து 16 பேர் பலி

லாகூர்: பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாண பகுதிக்கு உட்பட குவெட்டா நகரில் ஏற்பட்ட எரிவாயு கசிவு சம்பவங்களால் ஒரே வாரத்தில் குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகினர். இதுகுறித்து போலீஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ‘குவெட்டாவின் கிள்ளி படேஜாய் பகுதியில் உள்ள குடியிருப்பில் எரிவாயு காஸ் சிலிண்டர் கசிவால் வெடி விபத்து ஏற்பட்டது. அதனால் சுவர்கள் இடிந்து விழுந்தன.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் இறந்தனர். மற்றொரு சம்பவத்தில், எரிவாயு காஸ் நிரப்பிய போது ஏற்பட்ட வெடிவிபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் இறந்தார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் காஸ் சிலிண்டர் வெடித்த சம்பவத்தில் 16 பேர் பலியானதாக மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

Related Stories: