×

சென்னையில் 2022ம் ஆண்டு 554 கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள் பொது ஏலத்தில் விற்கப்பட்டது

சென்னை: சென்னை பெருநகர காவலில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட 554 வாகனங்கள் கடந்த 2022ம் ஆண்டு 3 தவணைகளாக பொது ஏலத்திற்கு விடப்பட்டு, 527 வாகனங்கள் ரூ.1,40,93,941/- தொகைக்கு  பொது ஏலத்தில் விற்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, அரசு மோட்டார் வாகன அதிகாரிகள் பரிந்துரையின்பேரில், கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள் கடந்த 2022ம் ஆண்டு 3 தவணைகளாக பொது ஏலத்திற்கு விடப்பட்டு, 527 வாகனங்கள் விற்கப்பட்டது.

அதன்பேரில், 10.02.2022 அன்று 1 இருசக்கர வாகனம், 104 இலகுரக வாகனங்கள் மற்றும் 9 கனரக வாகனங்கள் என 114 வாகனங்கள் பொது ஏலத்திற்கு விடப்பட்டு, ரூ.37,51,441/- தொகைக்கு விற்கப்பட்டது. தொடர்ந்து, 30.06.2022 அன்று 80 இருசக்கர வாகனங்கள் மற்றும் 74 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 154 வாகனங்கள் பொது ஏலத்திற்கு விடப்பட்டு, 141 வாகனங்கள் ரூ.50,32,500/- தொகைக்கும்,  29.12.2022 அன்று 220 இருசக்கர வாகனங்கள் மற்றும் 66 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 286 வாகனங்கள் பொது ஏலத்திற்கு விடப்பட்டு, 272 வாகனங்கள் ரூ.53,10,000/- தொகைக்கும் விற்கப்பட்டது.

இவ்வாறு சென்னை பெருநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட மொத்தம் 301 இருசக்கர வாகனங்கள், 254 இலகுரக வாகனங்கள் மற்றும் 9 கனரக வாகனங்கள் என மொத்தம் 554 வாகனங்கள் கடந்த 2022ம் ஆண்டு பொது ஏலத்திற்கு விடப்பட்டு, இதில் 527 வாகனங்கள் மொத்த தொகை ரூ.1,40,93,941/- தொகைக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai , In Chennai, 554 scrapped government vehicles were sold in public auction in 2022
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...