×

கே.எல்.ராகுல் -அதியா ஷெட்டிக்கு டோனி பைக், கோஹ்லி கார் பரிசு: ரூ50 கோடி மதிப்பு அடுக்குமாடி வீடு கொடுத்த மாமனார்

மும்பை: இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுலும், அவரது நீண்ட கால தோழியும், பாலிவுட் நடிகையுமான அதியா ஷெட்டியும் கடந்த திங்கட்கிழமை திருமணம் செய்துகொண்டனர். அதியா, பிரபல நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் ஆவார். திருமணத்திற்கு பிறகு, அனைவருக்கும் ராகுல் நன்றி தெரிவித்தார். அவருடைய மாமனார் சுனில் ஷெட்டி, நான் மாமனாராக மாறியதில் மகிழ்ச்சி அடைவதாகவும், ராகுலுக்கு அப்பாவாக நடிக்க விரும்புவதாகவும் கூறினார். ஐபிஎல் தொடருக்கு பின் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் நடைபெற்று வருவதால் கிரிக்கெட் வீரர்கள் விராட் கோஹ்லி, ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட யாரும் அவரின் திருமணத்தில் கலந்துகொள்ள இயலவில்லை. இருப்பினும் ராகுலுக்கு அவரின் நெருங்கிய நண்பரான விராட் கோஹ்லி, 2.17 கோடி ரூபாய் மதிப்பிலான பிஎம்டபிள்யூ காரை பரிசளித்துள்ளார். இதேபோல் டோனி ரூ. 80 லட்சம் மதிப்புள்ள கவாஸக்கி நிஞ்ஜா பைக்கை அளித்துள்ளார். சுனில் ஷெட்டியின் நெருங்கிய நண்பரான சல்மான் கான், அதியாவுக்கு ரூ.1.64 கோடி மதிப்புள்ள ஆடி காரை பரிசாக அளித்துள்ளார்.

ஜாக்கி ஷ்ராஃப், பிரபல சுவிஸ் சொகுசு கடிகாரம் மற்றும் நகை பிராண்டான சோபார்ட் வாட்ச்ஸின் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கடிகாரத்தை அதியாவுக்கு பரிசாக அளித்துள்ளார். அதியாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான அர்ஜுன் கபூர், அவருக்கு ரூ.1.5 கோடி மதிப்புள்ள வைர வளையலை பரிசாக அளித்துள்ளார்
இதனிடையே சுனில்ஷெட்டி, தனது மருமகனுக்கு ரூ.50கோடி மதிப்பிலான  ஆடம்பரமான அடுக்குமாடி குடியிருப்பை சீதனமாக கொடுத்துள்ளார்.


Tags : Tony ,Kohli ,KL Rahul ,Athiya Shetty , KL Rahul - Athiya Shetty gift Tony bike, Kohli car: Father-in-law gives flat house worth Rs 50 crore
× RELATED வேட்டி சட்டையுடன் சென்றதால் விராட்...