சென்னை: அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தை அகலப்படுத்தி தூர்வாரும் பொதுப்பணித்துறை திட்டத்துக்கு கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி வழங்கியுள்ளது. ரூ.21.63 கோடியில் திரு.வி.க. பாலம் முதல் அடையாறு ஆறு கடலில் கலக்கும் இடம் வரை 176,35 ஏக்கரில் தூர்வார அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அலையாத்தி தாவரங்கள், தீவுகள் உள்ள இடம் தவிர்த்து 176.35 ஏக்கர் பரப்பளவில் முகத்துவாரம் தூர்வாரப்பட உள்ளது.