இருக்கை ஒதுக்காததால் குடியரசு தினவிழாவை புறக்கணித்த எம்பி

புதுக்கோட்டை: இருக்கை ஒதுக்கப்படாத காரணத்தால் குடியரசு தினவிழாவில் இருந்து எம்பி புறக்கணித்து சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியரசு தினவிழா இன்று காலை கொண்டாடப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துவந்தது. இந்த விழாவில் பங்கேற்கும் முக்கிய பிரமுகர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்படும். இதன்படி முக்கிய பிரமுகர்களுக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

இன்று காலை நடந்த குடியரசு தினவிழாவில் பங்கேற்பதற்காக புதுக்ேகாட்டையை சேர்ந்த மாநிலங்களவை எம்பி அப்துல்லா வந்தார். அப்போது அவருக்கு இருக்கை ஒதுக்கப்படாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் சில நிமிடங்கள் தனக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளதா என்று பார்வையிட்டார். ஆனால் அவருக்கு இருக்கை ஒதுக்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் குடியரசு தினவிழாவை புறக்கணித்து எம்பி அப்துல்லா அங்கிருந்து கிளம்பி சென்றார்.

Related Stories: