திருச்சி அருகே வீட்டில் பதுக்கிய புலித்தோல், நாட்டு துப்பாக்கி பறிமுதல்: பிடிபட்டவரிடம் வனத்துறை விசாரணை

திருவெறும்பூர்: திருச்சி அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த புலித்தோல், நாட்டு துப்பாக்கியை வனத்துறையினர் கைப்பற்றினர். பிடிபட்டவரிடம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர். திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடியை காலனியை சேர்ந்தவர் அர்ஜுன் (32). இவர் தனது வீட்டில் புலித்தோல் வைத்து விற்க முயன்றதாக திருச்சி வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் பேரில் திருச்சி வன காவல் நிலைய வனச்சரகர் நவீன் குமார், வனவர் கலிலூர் ரகுமான், வனக்காப்பாளர்கள் சித்தி, கண்ணதாசன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் புலித்தோல், நாட்டு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். வீட்டில் இருந்த அர்ஜூனை பிடித்து விசாரணை நடத்தியதில், பழைய குற்றவழக்கில் தேடப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அர்ஜுனிடமிருந்து கைப்பற்றப்பட்ட புலித்தோல் உண்மையானது தானா அல்லது வேறு ஏதேனும் தோலின் மீது புலித்தோல் போல் வரையப்பட்டு உள்ளதா என வனத்துறையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: