×

ஜன.28, 29, 30ல் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் முதல் ஜன.30 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று முதல் ஜன.28 வரை நிலநடுக்கோட்டை ஒட்டிய இந்திய பெருங்கடல் - தென்கிழக்கு வங்கக்கடலில் பலத்த சூறாவளி வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஜன.29, 30 தேதிகளில் இலங்கையை ஒட்டிய தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் மணிக்கு 40 55 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளி வீச வாய்ப்புள்ளதால் மீனவர்களுக்கு இன்று முதல் 5 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Weather Centre , Chance of moderate rain on Jan. 28, 29, 30: Meteorological Department Information
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்