தமிழ்நாடு வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு

சென்னை: தமிழ்நாடு வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்களை அடையாளம் காண ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட வீரர்கள், தியாகிகளை பற்றி ஆராய்ந்து அடையாளம் காணும் முயற்சியில் பல்கலைக்கழகங்கள் ஈடுபட வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு பல்கலைக்கழகமும் குறைந்தது 5 சிறப்பு ஆராய்ச்சி மாணவர்களை நியமிக்க வேண்டும் எனவும் ஆராய்ச்சி மாணவர்கள் குறைந்தது ஒரு அறியப்படாத சுதந்திர போராட்ட வீரரை அடையாளம் காண வேண்டும் எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். அறியப்படாத சுதந்திர போராட்ட வீரர் குறித்து ஆராய்ச்சி செய்ய வேண்டும்,  இந்த ஆராய்ச்சி திட்டத்துக்கான ஃபெல்லோஷிப் வழங்கப்படும் என ஆளுநர் கூறியுள்ளார்.

Related Stories: