மாநில கல்வி கொள்கை வரைவு அறிக்கையை ஏப்ரலில் அரசிடம் அளிப்போம்: ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தகவல்

சென்னை: ஏப்ரல் மாதம் இறுதிக்குள் மாநில கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிட்டு இருக்கிறோம் என்று மாநில கல்விக் கொள்கைக் குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் கூறினார்.  அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களின் கருத்துகளை மாநில கல்விக் கொள்கைக் குழு நேற்று கேட்டது. இதற்கான நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்க வளாகத்தில் நடந்தது.

இது குறித்து மாநில கல்விக் கொள்கைக் குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் அளித்த பேட்டி: அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் கொண்டுவர வேண்டும் என்று சிலரும், தனித் தனி பாடத்திட்டமாக இருக்கலாம் என்று சிலரும் கருத்துகளை தெரிவித்தனர். மாநில கல்விக் கொள்கை வரைவு இறுதி அறிக்கை தயாரிக்கும் பணிகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து வருகிற ஏப்ரல் மாதம் இறுதிக்குள் மாநில கல்விக் கொள்கை குறித்த பரிந்துரைகள் அடங்கிய வரைவு அறிக்கை சமர்ப்பிக்க திட்டமிட்டு இருக்கிறோம்.

Related Stories: