எண்ணும் எழுத்தும் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு குடியரசு தினத்தில் பாராட்டு: முதல்வர் சான்று வழங்கி கவுரவிப்பு

சென்னை: எண்ணும் எழுத்தும் திட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள் 812 பேருக்கு குடியரசு தினவிழாவில் சிறப்பு செய்ய பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு பரவிய கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அந்த இடைவெளியை போக்கி அவர்கள் எண்ணையும், எழுத்துகளையும் அடையாளம் கண்டு எழுதவும் படிக்கவும் வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், தமிழ்நாடு அரசு, எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தை கொண்டு வந்தது.

அதற்காக அனைத்து மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கு பாடம் நடத்த சிறப்பு  ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் சிறப்பாக செயல்பட்ட 812 ஆசிரியர்கள் தற்போது தேர்வு பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அவர்களுக்கு, சென்னையில் இன்று  நடக்க இருக்கும் குடியரசு தின விழாவில் சிறப்பு செய்யவும் பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. மெரினா கடற்கரையில் நடக்கும் குடியரசு தின விழாவில் மேற்கண்ட 812 பேருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு செய்கிறார்.

Related Stories: