தலித் விரோத நடவடிக்கைகளை முதல்வர் தடுக்க வேண்டும்

சென்னை: காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதின விழா, குடியரசு தின விழா போன்ற நாள்களில் கிராமசபைகள் நடத்துவதை கட்டாயமாக்கி இன்றைக்கு அது நடைபெற்று வருகிறது. அத்தகைய விழாக்களில் பஞ்சாயத்து தலைவர்கள் தேசியக் கொடியை ஏற்றுகிற உரிமையை பெற்றிருக்கிறார்கள். அத்தகைய சூழல் தமிழகத்தில் இன்றைக்கு ஏற்பட்டு பட்டியலின மக்களுக்காக செயல்படுவதோடு, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவராக செயல்பட்டு மத, சமூக நல்லிணக்கத்தை தமிழக முதலமைச்சர் பாதுகாத்து வருகிறார்.

இந்நிலையில், தமிழகத்தில் சில பகுதிகளில் நடக்கிற தலித் விரோத நடவடிக்கைகளை குறிப்பாக, உள்ளாட்சி அமைப்புகளில் சில ஜாதிய சக்திகளால் நடத்தப்படுகிற அநீதிகளை இரும்புக்கரம் கொண்டு தமிழக முதலமைச்சர் ஒடுக்க வேண்டும்.

Related Stories: