×

டெல்லி ஜேஎன்யூ பல்கலைக்கழகத்தில் பரபரப்பு; பிபிசி ஆவணப்படம் திரையிட்ட மாணவர்கள் மீது கல் வீச்சு

புதுடெல்லி: இந்தியா- மோடிக்கான கேள்விகள் என்ற  ஆவணப்படத்தை பிபிசி முதல் பாகத்தை சமீபத்தில் வெளியிட்டது. மோடி குஜராத் முதல்வராக  இருந்தபோது நடந்த கலவரத்தை மையமாக வைத்து இந்த ஆவணப்படம்  தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இந்த ஆவண படத்தின் இரண்டாம் பாகம் நேற்று டிவியில் ஒளிபரப்பப்பட்டது. தடையை மீறி பிபிசியின் ஆவணப்படத்தை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(ஜே.என்.யூ) திரையிட மாணவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகம்  அனுமதி மறுத்தது. தடையை மீறி திரையிடப்பட்ட பிபிசி ஆவணப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் சில மாணவர்கள் காயமடைந்தனர். தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர். மீண்டும் படத்தை திரையிடாத வகையில் பல்கலை கழகம் சார்பில், மின்இணைப்பு, இணையதள சேவைகளை துண்டித்தது. அதனையும் மீறி பல  மாணவர்கள் ஒன்றாக கூடி தங்கள் மொபைல் போனில் பிபிசி ஆவணப் படத்தை பார்த்துள்ளனர். இந்த சம்பவங்களால் ஜேஎன்யூ பல்கலை கழக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. ஜமியா பல்கலை. மாணவர்கள் 70 பேர் கைது: பிபிசி ஆவணப்படத்தை திரையிடுவதாக ஜமியா மிலியா பல்கலை கழகத்தின் இந்திய மாணவர் கூட்டமைப்பு அறிவித்தது.

இதில் ஈடுபட முயன்ற 4 மாணவர்களை போலீசார் கைது செய்ததைத் தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் 70 பேரை போலீசார் கைது செய்தனர். கேரளாவில் ஒளிபரப்பிய கம்யூ., காங். இளைஞர் அமைப்பினர்: இதே போல, கேரளாவில் திருவனந்தபுரம், கோழிக்கோடு மற்றும்  கண்ணூர் பல்கலைக்கழகத்திலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான டிஒய்எப்ஐ, மாணவர் அமைப்பான எஸ்எப்ஐ மற்றும் இளைஞர் காங்கிரசார் பிபிசி ஆவணப்படத்தின் 2ம் பாகத்தை நேற்று திரையிட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Delhi ,JNU University ,Stone ,BBC , Confusion at Delhi's JNU University; Stone pelting on students who screened BBC documentary
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு