ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பைனலில் சானியா ஜோடி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் விளையாட, இந்தியாவின் சானியா மிர்சா - ரோகன் போபண்ணா ஜோடி தகுதி பெற்றது. அரையிறுதியில் அமெரிக்காவின் டிசைரே கிரவோஸிக் - நீல் ஸ்கப்ஸ்கி (இங்கிலாந்து) ஜோடியுடன் நேற்று மோதிய சானியா ஜோடி 7-6 (7-5) என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றது. அடுத்த செட்டில் கடும் நெருக்கடி கொடுத்த கிரவோஸிக் ஜோடி 7-6 (7-5) என கைப்பற்றி பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து கடைசி செட் டை பிரேக்கரில் அபாரமாக விளையாடிய சானியா - போபண்ணா ஜோடி 7-6 (7-5), 6-7 (5-7), 10-6 என்ற செட் கணக்கில் 1 மணி, 52 நிமிடம் போராடி வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் செர்பிய நட்சத்திரம் ஜோகோவிச் 6-1, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் ருப்லேவை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அமெரிக்காவின் டாமி பால் 7-6 (8-6), 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் சக வீரர் பென் ஷெல்டனை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் மேக்தா லினெட் (போலந்து), அரினா சபலென்கா (பெலாரஸ்) அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories: