டெல்லி: இந்தியாவை கட்டமைக்கும் பொறுப்பு இளைஞர்களிடம் உள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லியில் என்சிசி என்எஸ்எஸ் மாணவர்கள் மத்தியில் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்; இளைஞர்களின் நேர்மையான கருத்துகள்தான் என்னை இரவு பகலாக உழைக்க வைக்கிறது. இளைஞர்களின் வெற்றி இந்தியாவின் வெற்றியாகவே பார்க்கப்படும். உலகின் நலனுக்காக இந்தியா பாடுபட்டு வருகிறது.